2025 – 2026 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஆலிம் கல்வியில் இணைய கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.
தாருல் உலூம் அல் அதரி (சுருக்கமாக “அல் அதரி”) என்ற நிகழ்நிலை (Online) இஸ்லாமிய கல்விச்சாலை, இளம் வயதில் இஸ்லாமியக் கல்வியைத் தவறவிட்டு, அதனை மீண்டும் பெற ஏங்குபவர்களுக்கான ஒரு முழுமையான ஆலிம் கல்வியை வழங்கும் நோக்கில் 2015 ஆம் ஆண்டு முதல் நிகழ்நிலை (online) முறையில் நடைபெற்று வருகிறது.
அல் அதரியின் பாடத்திட்டம், ஆசிய நாடுகளில் உள்ள பாரம்பரிய மதரஸாக்களிலும், அரபு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் பயிற்றுவிக்கப்படும் துறைகளின் (ஃபன்) பாடங்களை, குடும்ப-சமூகபொறுப்புகளுக்கு மத்தியில் மார்க்கக் கல்வியைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ள பெரியவர்களும், இலகுவாகக் கற்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.