ஒவ்வொரு விஷயத்தை கற்றுக் கொள்வதற்கும் ஒவ்வொரு இலட்சியம் இருக்கும்.
அந்த இலட்சியங்கள் அனைத்துமே உலக வாழ்க்கையோடு சம்மந்தப்பட்டதாக இருக்கும். ஆனால், அரபி மொழியை கற்றுக் கொள்வதென்பது உலக ஆதாயங்களுக்கு அப்பாற்பட்டு மறுமை வெற்றியை மட்டுமே நோக்கமாக கொண்டதாகும். குர்ஆன் சுன்னாவை விளங்குவதற்கு அரபி மொழி அவசியமானதாக இருக்கிறது.
அல் ஆஜுர்ரூமிய்யா என்ற நூலின் ஆசிரியரின் இயற்பெயர் அபூ அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் இப்னு தாவூத் அசன் ஹாஜி என்பதாகும். இவர் இப்போது மொராக்கோவாக கருத்தப்படும் நாட்டில் வாழ்ந்தவர்கள். அறிஞர் இப்னுல் ஹாஜ் என்பவர் குர்ஆனுக்கு அடுத்து அதிகமாக ஒதித்தரப்படக்கூடிய ஒரு புத்தகம் ஆஜுர்ரூமிய்யா என்று கூறியுள்ளார்கள்.உலகளாவிய அளவில் இந்த புத்ததகத்தை அதிகமானவர்கள் பயிலுகிறார்கள்.
அல்ஆஜுர்ரூமிய்யா என்ற இந்த அரபி இலக்கண புத்தகத்தை தாருல் உலூம் அல் அதரியின் 2015 வருட மாணவர்களால் ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு எளிய மக்களுக்கும் புரியும் விதத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கலைச்சொற்களுக்கான விளக்கங்கள் குறிப்பு எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. அரபியைக் கற்க விரும்புபவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு வரவேற்பறையாக அமையும். இன்ஷா அல்லாஹ்.
அல்ஆஜுர்ரூமிய்யா என்ற இந்த அரபி இலக்கண புத்தகத்தை தாருல் உலூம் அல் அதரியின் 2015 வருட மாணவர்களால் ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு எளிய மக்களுக்கும் புரியும் விதத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இஸ்லாத்தின் இரண்டாம் மூல ஆதாரமான நூல் என்பது ஹதீஸ் உத்தம தூதர் நபி (ஸல்) அவர்களில் சொல், செயல், அங்கீகாரம் மற்றும் பண்புகள், வாழ்க்கை முறை ஆகியவற்றின் தொகுப்புகள் ஆகும்.
அல் மன்தூமத்துல் பைக்கூனியா என்ற கிதாப் ஆனது 34 வரிகளை கொண்ட அரபி கவிதை. இதன் ஆசிரியர் அஷ்ஷெய்க் உமர் தாஹா இப்னு முஹம்மது இப்னு ஃபத்துஹ் அல் பைகூனி என்றும் இவர் ஹிஜ்ரி 1080 களில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இமாம் அவர்கள் முஹத்திஸாகவும் உஸூலியாகவும் அறியப்படுகிறார்.
ஹதீஸ் கலை என்ற பொக்கிஷத்தை இஸ்லாமிய மக்கள் எளிதில் புரிந்து கற்றுக்கொள்வதற்காக, ஹதீஸ் வகைகளையும் ஹதீஸ் துறை சார்ந்த சொற்களையும் அதன் விளக்கங்களையும், மிக இலகுவான கவிதை நடையில் எழுதப்பட்டுள்ளது. இந்த சுருக்கமான வடிவம், ஹதீஸ் வகைகளைத் தெரிந்து கொண்டு நினைவில் வைக்க விரும்புபவர்களுக்கும், அதில் நிபுணத்துவம் பெற விரும்புகிறவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை கற்பதன் மூலம் மிக பெரிய இமாம்கள் எழுதிய ஹதீஸ் கலை விரிவுரைகளை இலகுவாக புரிந்து கொள்ளலாம்.
இஸ்லாத்தின் இரண்டாம் மூல ஆதாரமான நூல் என்பது ஹதீஸ் உத்தம தூதர் நபி (ஸல்) அவர்களில் சொல், செயல், அங்கீகாரம் மற்றும் பண்புகள், வாழ்க்கை முறை ஆகியவற்றின் தொகுப்புகள் ஆகும்.