இஸ்லாமிய ஷரீஅத் கல்விக்கான நிகழ்நிலை கல்விச்சாலை
இஸ்லாமிய ஷரீஅத் கல்விக்கான நிகழ்நிலை கல்விச்சாலை

ஆலிம் கல்வி

  • பட்டம் : மௌலவி. அல் அதரி” / “மௌலவிய்யா. அல் அதரிய்யா” என சான்றளிக்கப்படும்
  • கல்வியாண்டு : இஸ்லாமிய ஆண்டு (ஷவ்வால் –ஷஅபான்)
  • கால அளவு : 5 ஆண்டுகள்
  • மொழி : தமிழ் வழிக்கல்வி
திட்டம்
project

எங்கள் மதரஸாவின் பாடத்திட்டம், ஆசிய நாடுகளில் உள்ள பாரம்பரிய மதரஸாக்களிலும், அரபு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் பயிற்றுவிக்கப்படும் துறைகளின் (ஃபன்) பாடங்களை, குடும்ப-சமூகபொறுப்புகளுக்கு மத்தியில் மார்க்கக் கல்வியைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ள பெரியவர்களும், இலகுவாகக் கற்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டு ஆலிம் கல்வியை பின்வரும் வடிவமைக்கப்பட்ட படிநிலைகளில் எங்களின் மதரஸாவில் கற்றுத் தருகிறோம்.

  1. முதல் கட்டமாக, ஷரீஅத் கல்வியின் அடிப்படையான அரபு மொழியை தொடக்க நிலை, இடை நிலை, உயர் நிலை என்ற மூன்று நிலைகளாக பிரித்து. லுகா, இன்ஷா, பலாகா போன்ற அரபி மொழி இலக்கண-இலக்கியம் சார்ந்த 6 பாடங்களை கற்றுத் தருகிறோம்.
  2. மேலும், அரபு மொழியில் விரிவுரை மற்றும் மேடைப்பேச்சு செய்வதற்கான பயிற்சிகளையும் கற்றுத் தருகிறோம்.
  3. இதனுடன், முதலாம் ஆண்டில் அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாத் உடைய அகீதா (கொள்கை) பாடத்தை கற்றுத் தருகிறோம்.
  4. இரண்டாம் கட்டமாக, எளிமையான தொடக்க நிலை ஃபிக்ஹ் (சட்டம்) பாடங்களையும், குர்ஆன்-ஹதீஸ்-ஃபிக்ஹ் பாடங்களை அணுகத் தேவையான உஸூல்களை (அடிப்படைகள்) கற்றுத் தருகிறோம்.
  5. மொழி, உஸூல், அகீதா மற்றும் ஃபிக்ஹ் ஆகியவற்றின் ஆழமான அறிவின் துணையோடு, அடுத்த கட்டமாக,
    1. தஃப்சீர் (அல்குர்ஆன் விளக்கவுரை – ஐந்து விதமான தஃப்சீர்கள்).
    2. ஹதீஸ் அதன் ஷரஹ்களுடன், ஹதீஸ் ஆய்வு பற்றிய பாடங்கள் மற்றும் அதன் பயிற்சிகள்.
    3. ஃபிக்ஹுல் முகாரின் (நான்கு மத்ஹப்களின் ஒப்பாய்வு).
    4. ஃபலக் (வானவியல்).
    5. மன்திக் (தர்கக் கலை).
    6. அக்ஹ்லாக் – ஆதாப் (ஒழுக்கம்).
    7. பராஇழ் / மீறாத் (சொத்துப் பங்கீடு).
    8. சீறா / தாரீக்ஹ் (வரலாறு).
    9. தஃவா.
      ஆகிய பாடங்களைப் கற்றுத் தருகிறோம்.

இதன் இறுதி கட்டமாக, இந்திய அரசியலமைப்புச் சட்டம், IPC மற்றும் CRPC ஆகியவற்றயை பற்றிய அறிமுகப் பாடத்தையும் கற்றுத் தருகிறோம்.

சிறப்பம்சங்கள்
Highlights
  1. ஆசிய நாடுகளின் பாரம்பரிய மதரஸாக்களிலும், அரபு நாடுகளின் பல்கலைக்கழகங்களிலும் பயிற்றுவிக்கப்படும் ஃபன்களை உள்ளடக்கிய முறைமைபடுத்தப்பட்ட தரம்வாய்ந்த பாடத்திட்டம்.
  2. துறைசார் அனுபவமும் நிபுணத்துவமும் உள்ள பத்துக்கும் மேற்பட்ட பேராசிரிய ஆலிம் பெருந்தகைகளை கொண்டு பாடங்கள் கற்பிக்கப்படுகிறது.
  3. வாரந்திர வீட்டுப்பாடங்களை, பயிற்சிகளை சரிபார்க்க ஆலிம் குழு.
  4. மாணவர்களின் கல்வித்திறன் மேம்பாட்டிற்காக, சிறப்பு கவனத்துடன், ஆலிம்களை கொண்டு மீட்டல் (தவ்ரா) வகுப்புகள்.
  5. பெரியவர்களும் இலகுவாகக் கற்கும் வகையில் தனிச்சிறப்பான பாடத்திட்டம்.
  6. ஆண்-பெண் இருபாலருக்கும், ஆன்லைன் வழியாக, தமிழ் மொழியில் பயிற்றுவிக்கப்படுகிறது.
கற்பிக்கும் முறைமை
Teaching Methodology

 பதிவு செய்யப்பட்ட வகுப்பு

  1. வாரந்தோறும் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு பாடத்திற்கான வகுப்புகளின் இணைப்புகளை Mobile applications வழியாக மாணவர்களுக்கு அனுப்பப்படும்.
  2. மாணவர்கள் வகுப்பு பதிவுகளைப் பதிவிறக்கம் செய்து, அதைக் கேட்டு, குறிப்புகள் எடுக்க வேண்டும்.
  3. மாணவர்கள் பாடத்தைப் புரிந்து கொண்டார்கள் என்பதை உறுதிசெய்யும் பொருட்டு, ஆசிரியர் குறிப்பிடும் காலத்தவணைக்குள், எடுத்த குறிப்புகளை தவறாமல் Scan செய்து அனுப்ப வேண்டும் Mobile Application இல் பதிவேற்றம் செய்ய வேண்டும் .

நேரலை வகுப்பு

  1. மாணவர்கள் படித்ததை மீட்டிப் பார்க்கும் வண்ணம்,சீரான கால இடைவெளியில் தொடர் நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.

பாட செயற்பாடுகள்

  1. மாணவர்களை ஆழமான ஷரீஅத் கல்வியறிவைப் பெற்றவர்களாக உருவாக்கும் பொருட்டு, அவர்களைப் பல்வேறு பாட செயற்பாடுகளைக் கொண்டு எங்கள் மதரஸா பயிற்றுவிக்கிறது .
  2. பாட செயற்பாடுகள் என்பது வீட்டுப்பாடம் (பாடக்குறிப்புகள் + பயிற்சிகள்), வகுப்பீடு (Assignment) ஆகியவற்றைக் குறிக்கும்.
  3. மாணவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் பாட செயற்பாடுகளும் அதை சமர்ப்பிக்க வேண்டிய நாளும் ஆசிரியரால் குறிப்பிடப்படும். கொடுக்கப்பட்ட பாடச் செயற்பாடுகளை சமர்ப்பிக்க வேண்டிய நாளிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ தவறாமல் அனுப்ப வேண்டும்.ஒவ்வொரு பாட செயற்பாடுகளுக்கும் மதிப்பெண்கள் உண்டு.
  4. தொடர்ச்சியாக ஐந்து பாட செயற்பாடுகளை சமர்ப்பிக்காத மாணவர், மதரசாவின் ஆலிம் கல்வியிலிருந்து விடுவிக்கப்படுவார்.

வருகைப்பதிவேடு முறைமை

  1. வருகைப் பதிவேடு பாட வாரியாக, நேரலை வகுப்பிற்கு மாணவரின் வருகையை வைத்தும், பதிவு செய்யப்பட வகுப்பிற்கு பாடத்தைக் கேட்டு மாணவர்கள் அனுப்பும் குறிப்பை வைத்தும் பதிவு செய்யப்படும்.
  2. ஒவ்வொரு பாடத்தின் இறுதித் தேர்வில் கலந்து கொள்ள, மாணவர் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 80% தனது வருகைப்பதிவு பெற்றிருக்க வேண்டும்.
  3. 80%க்கும் சற்றுக் குறைவான வருகைப் பதிவு இருக்கும் மாணவருக்கு, அந்தப் பாடத்தின் இறுதித் தேர்வில் கலந்துக்கொள்ளும் தகுதி பெற, கூடுதலான பயிற்சிப்பாடங்கள் வழங்கப்படும்.
மதிப்பீட்டு முறைமை
Evaluation Methodology

ஒவ்வொரு பாடத்தின் மதிப்பீடு என்பது உள்மதிப்பீட்டு மதிப்பெண் (Internal Marks) மற்றும் இறுதித் தேர்வு மதிப்பெண் (Final Exam Marks) என இரு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. மாணவர்கள் இவ்விரு முறைமைகளிலிலும் பெறும் மதிப்பெண்களில், ஒவ்வொரு முறைமைகளிலிருந்தும் 50% இறுதி மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளப்படும்.

பகுதி அ: உள் மதிப்பீடு (Internal Marks)

உள்மதிப்பீடு என்பது பாட செயற்பாடுகள் (Coursework) மற்றும் சுழற்சித் தேர்வுகளின் (Cycle tests) அடிப்படையில் ஒவ்வொரு பாடத்திற்கும் வழங்கப்படும்.

பாட செயற்பாடுகள் (Coursework):

ஒவ்வொரு பாட செயற்பாடுகளுக்கும், குறித்த நேரத்தில் சமர்ப்பித்தல் என்ற அடிப்படையில் கணக்கிடப்படும்.

சுழற்சித் தேர்வுகள் (Cycle tests):

இரண்டு மாதத்திற்கு ஒரு முறை, முதல் வெள்ளிக்கிழமை / ஞாயிற்றுக்கிழமை அன்று சுழற்சித் தேர்வுகள் நடத்தப்படும்.

மொத்த உள்மதிப்பீட்டின் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 100 க்கு 60 ஆகும்.

பகுதி ஆ: இறுதி தேர்வு (Final Exam)

  1. இறுதி தேர்வு ஒவ்வொரு ஆண்டின் ஷஅபான் மாதத்தில் நடைபெறும்.
  2. உள்மதிப்பீட்டில் குறைந்தது 60 சதவீதமும் வருகை பதிவேட்டில் குறைந்தது 80 சதவீதமும் பெறும் மாணவர்கள் மட்டுமே அந்தப் பாடத்தின் இறுதித் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
  3. இறுதித் தேர்வு மாணவர்களின் வசிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள பிரபல்யமான மதரசாவில், ஆலிமின் மேற்பார்வையில் நடைபெறும்.

இறுதித் தேர்வின் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 100 க்கு 40 ஆகும்.

 

× How can I help you?